Dhinamum Ennai Kavani

Tuesday, January 30, 2007

Polambals....

Too tired in the evening when got back home, thought of having dinner and go to bed asap atleast before 9.30, well, managed to finish dinner at 10.00 and ready to crash

Suddenly remembered what happend to Arasi and Abi last nite, OK decided to watch those recorded serials by skipping the adds, done at 10.30 and the curiosity inside wanted to continue today's too...finally it was 11 when Arasi was over, starting to stretch and hear a low weep with an increasing sound level of 2 decibels per second, time to change diaper, done that and handed over to mom for feed, can't wait anymore, got a request(more of an order) to burp the baby....hoila finally crashed at 12.30am......

As usual it was ******** cold in the morning, have to leave home by 7.15 to catch 7.45 shuttle, stupid alarm yells at 6:15.. keep on snoozing it till 6.45, things are at lightning speed, got out of home by 7.10, try to start the car, hear some noise tara tara tara tic tic tic, what happened to my brand new benz, opened the hood to check the battery and found that it was five years old (don’t ask about the car its senior to battery...did I say brand new benz? I meant to say my Latchumi has seen lot of new benz on the road)

Hit the road after two hard smashes on the battery nobbs, oops heavy traffic...looks like left lane is moving faster... some how managed to squeeze in to the left lane ignoring all the honks, the traffic slows down again and right lane moves faster now, finally reached the shuttle stop saw the shuttle is still waiting, hurry go park the car and run, just away from few feet saw the shuttle leaving, s**t have to drive again another 20 miles in the jammed traffic, tho late entering the office at 9.15am start up the computer open the browser to check the blog and satisfied to see few more comments....

athu onnum illanga... S0ul oru post la ithey maathiri polambi irundhaanga...athu paarthu copy...enakum konjam nanjam therinja inglees marandhuda koodaathu illa....


Wednesday, January 24, 2007

R's Kalattaas-III

இந்த படத்த பாருங்க என்னனு புரியலனா கடைசில இருக்கு விளக்கம்...அப்ப தெரியும் என்னோட்ட டொட்டடோகிராபி..இதுக்கும் இந்த போஸ்டுக்கும் எந்த சம்பந்தமும் லேதண்டி....










இந்த போடி பெரிய தில்லாலங்கடினு முன்னாடியே சொல்லி இருக்கேன் இல்ல...அவனோட கதைய கொஞ்சம் கேளுங்க...

ஒரு தடவை செமஸ்டர் முடிஞ்சு அவன் ஊருக்கு கிளம்பினான்..நாங்களும் இருடா நாளைக்கு தான் நாங்க எல்லாம் போறோம்னு சொல்லி பார்த்தோம் கேட்கல...சரி போடானு விட்டாச்சு...நைட் போயே ஆகனும்னு கிளம்பினவன் கலைல 5 மணிக்கு திரும்ப வந்து கதவ தட்டினான்...ஏண்டா போகலாயானு கேட்டதுக்கு...இல்ல போய் பழனி பஸ்ல ஏறுனேன்...ஒரு பிகர் இருந்தது அது எங்க போகுதுனு தெரியல அதுனால, நானும் பொள்ளாச்சிக்கு டிக்கட் எடுத்தேன் அந்த பிகர் பொள்ளாச்சில இறங்கல...அப்புறம் உடுமலை, பழனி னு டிக்கட் எடுத்து பழனி போனேன்...அந்த பிகர் மதுர பஸ்ல ஏறுச்சு...நானும் அது கூடவே மதுர போய்ட்டேன்...அங்க bus stand ல அவங்க அப்பன் வந்து பிக்கப் பண்ணிட்டு போய்டான்னு சொன்னான்...அதுனால என்னடா அங்க இருந்து உங்க ஊர் பக்கம் தான போய் இருக்கலாம் இல்லனு கேட்டதுக்கு..நானும் அப்படி நினைக்கும் போது இன்னொரு பிகர் வந்து கோயம்புத்தூர் பஸ்ல ஏறுச்சுனு நானும் ஏறிட்டேன்...இங்க வந்து இறங்குனதும் அதே கதை..இந்த அப்பனுகளுக்கு எப்படிதான் மூக்கு வேக்குமோ அப்படினு புலம்பிட்டு...ரொம்ப டையர்டா இருக்கு நாளைக்கே போறேன்னு படுத்து தூங்கிட்டான்....

நாங்க ரெகுலரா சைட் அடிக்கர பிகர்ஸ்ல ஒரு பிகர் மட்டும் எங்கள மனுசனாவே மதிச்சது இல்ல...இருந்தாலும் நாங்க மனம் தளருவோமா...ஒரு நாள் போடி பெட் கட்டி நான் போய் அந்த பிகர்ட பேசிட்டு வரேன்னு போனான்...கொஞ்ச நேரத்துல பாத்தா இவன் என்னமொ சொல்ல அந்த பிகரும் சிரிச்சிட்டே என்னமோ சொல்லிட்டு போகுது...எங்களுக்கு வயிறு வாய் எல்லாம் புகை...நைட் போடிய தனியா கூப்பிட்டு என்னடா பேசினேனு கேட்டதுக்கு...நான் எங்க பேசினேன்...போய் வடிவேல் ஸ்டைல்ல வாட் இஸ் யுவர் நெய்ம்னு கேட்டேன்...அது போடா நான்சென்ஸ் அப்படினு சொல்லுச்சு...நான் தேங்க்ஸ் சொன்னேன்...அதுனால சிரிச்சுட்டே போச்சுன்னு சொன்னான்....

அப்புறம் அங்கயும் இங்கயும் அலஞ்சு பார்த்திட்டு ஒன்னும் தேறாம...எங்க ஜீனியர் ஒரு பொண்ண பிராக்கட் போட்டுட்டான்..கேட்டா லவ்வாம்...அப்போ அவனுக்கு பைக் ஓட்ட தெரியாது அதுல இண்ட்ரஸ்டும் காட்டிக்க மாட்டான்...திடீர்னு ஒரு நாள் நைட் பைக் ஓட்டி பழகறேன்னு சொல்லிட்டு விடிய விட்ய நாங்க இருந்த தெருவ..பர்ஸ்ட் கியர்லயே ரவுண்ட் வந்திட்டு இருந்தான்...அடுத்த நாள் தான் தெரிஞ்சுது அந்த பிகர் பைக்ல போகனும்னு சொல்லிருக்குனு...இவனும் அந்த பொண்ண நேரு ஸ்டேடியம் வர சொல்லிட்டு பைக்ல உக்கார வெச்சு ஸ்டேடியம் சுத்தி பர்ஸ்ட் கியர்லயே 10 ரவுண்டு வந்து இருக்கான்...அந்த பொண்ணு வேற எங்கயாவது போலாமானு கேட்டதுக்கு...இல்ல இங்க எங்க சொந்தகாரங்க அதிகம் பாத்திட்டா பிராப்ளம் ஆகிடும்னு சொல்லி கடைசி வரைக்கும் பைக் ஓட்ட தெறிஞ்ச மாதிரியே பில்டப் குடுத்திட்டு வந்துட்டான்....

போன வாரம் போடிக்கு போன் பண்ணினேன்...ஒரே சத்தமா இருந்தது எங்கடா இருக்கனு கேட்டா தியேட்டர்ல இருக்கேன்னு சொன்னான்...என்ன படம் பார்க்கறேனு கேட்டதுக்கு வல்லவன்னு சொன்னான்..நான் த்தூ அத போய் தியேட்டர்ல பார்க்கரயாடானு கேட்டதுக்கு...என்ன பண்றது நயன் நல்லா இருக்கானு சொன்னாங்க அதுனால வீட்ல இருந்து பார்த்தா நல்லா ரசிக்க முடியாதுனு தியேட்டர் வந்தேன்னு சொன்னான்.....நல்லது சாமி நல்லது நம்ம எல்லாம் இப்படியே தான் என்னைக்கும் இருக்கனும் வாழ்க வளமுடன்னு சொல்லி போன வெச்சுட்டேன்....


எங்க ஊர்லயும் வெயில் பொளந்து கட்டுதுங்கோ..

Thursday, January 18, 2007

ஊடல்....

அதாவது மனைவியை கவர்வது எப்படினு திவ்யா ஒரு போஸ்ட் போட்டு இருந்தாங்க...அருமையான போஸ்ட்...ஆனா அவங்க சொல்றது அப்படியே follow பண்ணிட்டு இருந்தா...வாழ்க்கைல ஒரு திரில் இல்லாம போய்டும் இல்ல...அதுனால கொஞ்சம் ஊடலும் இருந்தாதான் நல்லா இருக்கும்...அதுக்கு இங்க சில டிப்ஸ்....

1. ஆபீஸ்ல ரொம்ப போரடிச்சு...எல்லா பிளாக்குக்கும் போய் கமெண்ட் போட்டும் அப்புறமும் என்ன பண்றது அப்படிங்கற நேரத்துல மனைவி கிட்ட இருந்து கால் வந்தா...நான் அப்புறம் பேசறேன் பிஸினு சொல்லி வெச்சுறனும்...சாயந்தரம் வீட்டுக்கு போன உடனே திருவிழா ஆரம்பிச்சுடும்...நானும் பார்த்திட்டே இருந்தேன் எல்லா பிளாக்லயும் உங்க கமெண்ட் இருந்தது நான் கூட்பிட்டா மட்டும் பிஸியானு...இந்த வார்த்தய வெச்சு அப்படியே சண்டைய டெவெலப் பண்ணிட்டா ஒரு வாரம் தாங்கும்....

2. Party ல அதிகமா தண்ணி அடிக்கலனு முன்னாடியே சொல்லிட்டு...அதிகமா அடிக்கறமோ இல்லயோ அடிச்ச மாதிரியே கொஞ்சம் act குடுத்து எல்லோரயும் திரும்பி பாக்க வெச்சா போதும்...அம்மணிகளுக்கு நல்லா சூடேறி பேச்சுவார்த்தை குறைஞ்சுடும்...ஒரு 10 நாள் ஓட்டலாம்...


3.பக்கத்துவீட்டுகாரி கேனத்தனமா இருந்தாலும்...அவள பாரு என்னமா டிரஸ் பண்றா என்னமா பேசறா செம IQ அப்படினு சொல்லுங்க...அன்னைக்கு ஒரு extra தீபாவளி வீட்டுல ...15 நாள் கேரண்டி....

4. ஆபீஸ்ல ஒரு பொண்ணுகிட்ட (பிகரா இருக்கனும்னு எல்லாம் அவசியம் இல்ல, இருந்தா உங்களுக்கு சுளினு அர்த்தம்)..இன்னைக்கு சாயந்தரம் என் செல்போனுக்கு கூப்பிடு..வேற யாராவது எடுத்தா personal அப்புறமா பேசறேன்னு வெச்சுடுனு சொல்லிடுங்க....போன் வர நேரம் தங்கமணி எடுக்கற மாதிரி பார்த்துக்குங்க... அப்புறம் அன்னைக்கு வீட்டுல ஒரு சுனாமி பார்க்கலாம்....25 நாள் ஓட்டி வெள்ளி விழா கொண்டாடிடலாம்..

இது எல்லாம் try பண்ணி பார்த்த அப்புறம் உங்க அம்மணி சாப்பாட்டுல விஷம் வெச்சு கொல்ல பார்த்தாங்க அப்படினு யாரும் என்கிட்ட complaint பண்ண கூடாது...

Tuesday, January 09, 2007

SFO Trip

ஒரு வழியா நானும் டூர் போறேன்னு போய்ட்டு வந்து சேந்தாச்சு....எது எப்படியோ என்னோட மகனுக்குதான் நான் பெரிய டாங்ஸ் சொல்லனும்....இங்க பிளைட்ல ஏறுனதுல இருந்தே ஏர்ஹோஸ்ட்டஸ் எல்லோரயும் பாத்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான்...இதுல அவங்களும் வந்து you are so cute, happy baby அது இதுனு சொல்லீட்டு போனாங்க...சரினு நானும் thank you,thankyou னு சொல்லிட்டு இருந்தேன்...ஒரு மணி நேரம் நல்லா போச்சு...திடீர்னு தங்கமனிக்கு பொறி தட்டிருச்சு போல...ஏங்க அவங்க எல்லாம் பையன தான அழகா இருக்கான்னு சொல்றாங்க...நீங்க எதுக்கு திறந்த வாய மூடாம அவங்க கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு started mujic....எப்படியாவது சமாளிக்கனுமே...அது ஒன்னும் இல்லமா...இவனால பேச முடியாது அதுனால நான் டப்பிங் குடுக்கறேன்....அவன் பேச ஆரம்பிச்சுட்டா நான் ஒதுங்கிக்குவேன்னு சமாளிக்க வேண்டியதா போச்சு...

அப்புறம் எல்லா இடமும் நல்லா சுத்தி பார்த்தோம் அது பத்தி தனியா ஒரு போஸ்ட்ல எழுதறேன்...ஆனா ஒரு இடத்த பத்தி இங்க சொல்லியே ஆகனும்...San Frasisco's China Town என்ன ஒரு அருமையான இடம்...நம்ம பெங்களூரு பிரிகேட் ரோடு மாதிரினு வெச்சுக்கங்களேன்...ஆனா அதிகமா pub இல்ல ஜன நடமாட்டம் அதிகம்...எல்லாம் சைனா காரங்க கடை...தங்கமனி சாப்பிங் போறேன்னு சொன்னாங்க...நானும் என்னோட வாரிசும் பிளாட்பார்ம்ல துண்ட விரிக்காத குறையா உக்காந்துட்டோம்....ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்....கண் கொள்ளா காட்சி....எத்தன விதமான பிகர்கள்...என்னனு சொல்ல... China Town ல shopping பண்ணது 22 டாலர்க்கு ஆனா parking க்கு 35 டாலர்...என்ன கொடுமை...


வருசம் பூரா ஆணி புடுங்க உட்டாலும்...எங்க டேமேஜர் ஒரு பாசக்கார பயபுள்ள எனக்கு நியூ இயர்க்கு என்ன கிப்ட் குடுத்து இருக்கான்னு பாருங்க....

என்னானு தெரியுதுங்களா...இல்லனா அடுத்த போட்டோ பாருங்க....















Thursday, January 04, 2007

என் இனிய தமிழ் மக்களே!!!

srikanth, divya, Arunkumar, மணி ப்ரகாஷ், T.R.C sir, மு.கார்த்திகேயன், அனுசுயா,
fun2fun, g3, KK, ponnarasi kothandaraman, jeevan, ambi, karthik b.s, கோபிநாத்,
பொற்கொடி, shankari, kittu, nanyaar?, கைப்புள்ள, has to be me, smiley, SKM,
thetalkativeman, krk, rudra, harish, dreamzz, one among you, deekshanya, me too
pria, வேதா, ஜி, Viji, bharani, prithz, ms.congeniality, deepa,
me, adiya, shree, gopalan ramasubbu, visithra, vidya, mgnithi,
bharathi, sumathi, கீதா சாம்பசிவம், golmaalgopal, நாகை சிவா, usha, my days (gops), venkatesh, oliveoyl,mystery, mahesh, priya, gayathri chandrashekar, manju, இராம்


thank you very much for your warm wishes, my plan was to come back on 2nd Jan but asusual oru 2 more days extend panni ippo thaan vandhen...athukulla namma KK enna kanama ponavanga list la add panni announce pannitaar....avalo seekiram unga ellam nimmathiya iruka vitruvena....pardon me until end of this week...next week la irundhu katcheriya aarambichudalaam....innum niraya per blog ku poi New Year wish pannave illa...athayum pannidaren....until then hee hee hee.... :-)