எளிய முறையில் தமிழ் பதிவு (Tamil Posting for Dummies)
இந்த பதிவு தமிழில் டைப் கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பவர்களுக்காக, தமிழ் எழுத படிக்க தெறிந்திறுத்தல் அவசியம் அதை தவிர வேறு ஒன்றும் தெறிந்து இருக்க வேண்டியது இல்லை
( This is for people who are trying to learn how to type in Tamil, There are no prerequisites beyond a general familiarity with understanding,reading and writting Tamizh letters)
அப்புறம் இத யாருக்காவது சமர்ப்பனம் பன்னனும்னு தோனுச்சு நயன் தாராக்கு பன்னா அஸின் கோவிச்சுக்குவா, அஸின்க்கு பன்னா திரிசா கோவிச்சுக்குவா சரி இந்த மூனு பேருக்கும் பன்னலாம்னா தமிழ் நாட்டுல இருக்கும் ஒரு கோடியே இருபது லட்சம் இளைங்கர்களும் கோவிச்சுக்குவாங்க அதுனால freeah vidu தான்
( I wanted to dedicate this post to some one, if I dedicate it to Nayanthara, Asin will get mad at me, if I decide for Asin, Trisha will yell at me, If I dedicate this to all the three then 12 million youngsters in TamilNadu would wish me go to hell, so am just leaving it as it is)
சரி பாடத்துக்கு போவோமா (lets go to lesson)
இது கொஞ்சம் வயலும் வாழ்வும் மாதிரி இருக்கும் வேற வழி இல்ல
( This will look like Vayalum Vazhvum programme in DhoorDharshan but no other go)
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் சுட்டிக்கு போய் ஈகலப்பை என்னும் மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கனினியில் இன்ஸ்டால் செய்யவும் (நன்றி செந்தழல் ரவி)
(click on the URL below to download and install Ekalappai software) http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=3
அது முடிந்த பின்னர் ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) அல்லது இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்க்கு போய் Alt+2 அமுக்கிவிட்டு கீழே உள்ள முறையை பின்பற்றி தமிழில் டைப் அடிச்சு தூள் கிளப்புங்க
(Once you are done with installing the software open firefox or Internet Explorer press Alt+2 simultaneously,type in the letters using the following example)
என்னுடைய அனுபவத்தில் இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நன்றாக உள்ளது
(Internet explorer is better in my personal experience)
அ- a, ஆ- aa, இ - i, ஈ - ii , உ - u, ஊ- uu, எ - e, ஏ - ee, ஐ - ai, ஒ - o, ஓ - oo, ஔ - au, ஃ- q
க்- k, க - ka, கா - kaa , கி - ki, கீ - kii , கெ - ke, கே - kee, கு - ku, கூ - kuu, கொ - ko , கோ - koo , கை - kai, கௌ - kau
இது மாதிரி கடைப்பிடித்து மற்ற எழுத்துக்களையும் எழுதலாம், முதல் எழுத்துக்களை மட்டும் கீழே கொடுத்து உள்ளேன்
( follow the same example for the remaining letters, I have given only the first letters below)
ங- nga, ச - sa, ஞ nja, ட ta, ண Na, த tha, ந - wa, ப - pa, ம - ma, ய - ya, ர - ra, ல - la, வ - va, ழ - za, ள - La, ற - Ra, ன - na
வட மொழி எழுத்துக்கள் இங்கே (here are the letters from Sanskrit)
ஜ - ja, ஷ - sha, ஸ - Sa, ஹ - ha
திரும்ப இங்கிலீஸ்க்கு போக Alt+1 அழுத்துங்க (Press Alt+1 to switch back to english mode)
சரி படிச்சு முடிச்சு உபயோகமா இருந்தா ஒரு 10 டாலர் மனி ஆர்டர்ல அனுப்பி வைங்க
(if you find it useful pls send 10 Dollars by money order)
முருகன் டாலரா வெங்கடாசலபதி டாலரானு கேக்காதீங்க, அப்புறம் யாரு அவரு மணி எனக்கு அவர தெரியாதேனும் சொல்லபடாது......
(pls don't ask me whether its Lord Muruga or Venkatachalapathi dollar, and don't tell me "I never know Mr.Mani" as well)
Next post is about Sex in The Cave , Ithu ambi oda marketing technic am just following it