Dhinamum Ennai Kavani

Saturday, December 23, 2006

innoru Leave Letter



ada thu...unakku ithey velaya pochu apdinu thaana solreenga...correct...ithunaala 18 patti blog kum therivippathu ennana....am taking off to California on vacation , see you all next year, I mean January 2nd, in between if I have internet access will visit you guys...




WISH YOU ALL

HAPPY HAPPY HOLIDAYS
MERRY CHRISTMERRY CHRISTMAS
ANDANDANDANDANAND
PALAPALAAA NELAAAPALAPALAAA NEW YEAR



nethu pirandha maathiri iruku...Mughil has turned 6 months now...athuthaan ungala ellam paarkalaamnu inga vandhu irukaan..Mughil yaarunu theriyaathavangaluku avan ennoda uthama puthiran :-)

Tuesday, December 19, 2006

Home Sweet Home....


61 நாட்டுல இருந்து என்னோட பிளாக்க விசிட் பண்ண அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் ஒரு பெரிய நன்றிங்கோ..நன்றினு சின்ன வார்த்தைக்குள்ள உங்க அன்ப அடைக்க முடியாது இருந்தாலும் என்னோட அன்ப உங்களுக்கும் காட்டனும் இல்ல...சரி இந்த வார கச்சேரிக்கு போலாம் வாங்க

சென்னைல வீடு வாங்கனும்னா பேங்க கொள்ளை அடிச்சா தான் முடியும் போல இருக்கு...யாராவது சண்டைக்கு வந்தா கூட மெட்ராஸ் ஸ்டைல்ல நம்மால வூடு கட்ட முடியாது...அதுனால என்ன செய்யலாம்னு யோசிச்சா நம்ம மக்கள் வந்து நானும் வரேன்னு சொன்னாங்க...சரினு பேங்க கொள்ளை அடிக்க கிளம்பியாச்சு...

அது எந்த பேங்குனு வெளில சொல்ல முடியாது...சரி நம்ம blog friends எல்லோரும் ரெடி ஆகி nite 12 மணிக்கு பேங்கு வர பிளான், வந்து பார்த்தா நிறைய பேர காணோம்...என்ன ஆச்சு
பரணி எங்க? அவரு பிளாக்குக்கே லீவு போட்டுட்டு பாவனாவ பார்க்க போய்டாரு இங்க எங்க வர போறாறு, dreamzz? அவரு தீபா வீட்டுக்கு முன்னாடி உக்காந்திருக்காரு, கார்த்திக் முத்து? அவரு அஸின் பட சூட்டிங் இருக்குனு வேடிக்கை பார்க்க போய்டாரு,அம்பி? அவர பஞ்சாப் போற டிரெயின்ல பார்த்ததா பேசிட்டாங்க...ஆகா ரொம்ம்ம்ம்ப நல்லவங்க...

சரி
srikanth? அதோ கேமெராவோட ரெடியா நிக்கறார் பாருங்க நம்ம கொள்ளை அடிக்கரத லாங் சாட்ல க்ளோசப்ல போட்டோ பிடிக்க போறாறாம், KG? அங்க உக்காந்து இத எல்லாம் ஜூ.வி ராத்திரி ரவுண்டப்ல எழுதபோறேனு பார்த்திட்டு இருக்கார்...இப்பிடியும் ரெண்டு பேரு வேணும்...

karthik b.s எங்கனு நான் கேட்க அருண் செம கடுப்பு ஆகி யோவ் என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும் போய் தீபிகா கிட்ட கேளுங்கனு சொல்றார்...golmaal எங்கபானு கேட்டா KK சொல்றார் அவரு புது கம்பெனில சத்தம் வராம பேங்க் கொள்ளை அடிப்பது எப்படினு ட்ரெயினிங்க்கு போய்ட்டார்னு....Gils? அவரு இப்பத்தான் சிங்கப்பூர்ல இருந்து வாங்கிட்டு வந்த செண்ட் அடிச்சிட்டு ரிசப்சன் பக்கத்துல நின்னுட்டு இருக்கார் பாருங்க....ஆகா இப்படி தான் எல்லோரும் ஒற்றுமயா இருக்கனும்...

இந்த நேரத்துல நம்ம
kittu மாம்ஸ் வந்து எல்லா பிளாக்லயும் போய் கமெண்ட் போடுற ஸ்டைல்ல hahahaa super னு சொல்லிட்டு அவரு பாட்டுக்கு போய்டே இருக்காரு...வெட்டி அங்கே இருக்கும் CC டிவிய பார்திட்டு ரொம்ப யோசனை பண்ணிட்டு இருகாரு...நாகை சிவா வந்து என்ன வெட்டி என்ன பண்ணிட்டு இருக்கனு கேட்டதுக்கு வெட்டி சொல்றார் இல்ல இதுல ஏதாவது தெலுங்கு படம் போடுவாங்களானு பார்த்திட்டு இருக்கேன்...நாளைக்கு இத பத்தி விமர்சனம் எழுதி ஒரு போஸ்ட் போட்டுடலாம்னு சொல்றார்....

திடீர்னு மேனேஜர் கேபின்ல இருந்து நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்னு பாட்டு கேக்குது...இது யாருடா சென்னைல உக்காந்துகிட்டு இந்த பாட்டு பாடுறதுனு பார்த்தா நம்ம KK....இன்னொரு பக்கம் நம்ம adiya உக்காந்து தோசை சுடுவது எப்படினு சொல்லிட்டு இருக்கார்...நம்ம எல்லாம் எதுக்கு வந்தோம் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...

அருணும்,
மணியும் பேங்க் cafeteria ல உக்காந்து என்னமோ பேசிட்டு இருக்காங்க...
அருண் - சின்சினாட்டில கார்ல போகும் போது பின்னாடி காப் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா
மணி - அவன் கிட்ட நீ தங்கக்காப்பா இல்ல வெள்ளிக்காப்பானு கேக்கனும்...

இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கும் போதே காலை மணி 10 ஆகிடுது...பேங்க் staff எல்லோரும் வர ஆரம்பிச்சுட்டாங்க...மேனேஜர் வந்து இருக்கும் கூட்டத்த பார்த்திட்டு ஆகா நம்ம பேங்குக்கு இவ்வளவு புது கஸ்டமர்ஸா...இது அமெரிக்கா Thanks Giving sale கூட்டத்த விட அதிகமா இருக்கேனு ஓசிச்சிட்டு இருக்கார்...அப்போ ஒரு staff வந்து அவருகிட்ட சார் இவங்கள பார்தா கஸ்டமர்ஸ் மாதிரி தெரியல எதுக்கும் போலீஸ்க்கு போன் பண்ணிடுவோம்னு சொல்றார்...இது நம்ம தல
கைப்புள்ள காதுல கேட்றுது...உடனே கொதிச்சு போன அவரு டேய் எவண்டா அது போலீஸ் அது இதுனு...பேச்சு பேச்சா தான் இருக்கனும் போலீஸ் ஸ்டேசன் எல்லாம் எங்க பரம்பரைலயே யாரும் போனது கிடையாதுனு சொல்ல...நான் சொல்றேன், தல போன மாசம் தான் ரெண்டு பேரும் ரெண்டு நாள் உள்ள இருந்துட்டு வந்தோம்...அதுக்கு தல, அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்...எப்படியோ தல உட்ட சவுண்ட்ல எல்லோரும் எஸ்கேப் ஆகி வந்து அவங்க அவங்க பிளாக்க பார்க்க போலாம்னு கிளம்பியாச்சு...அம்புட்டுதேன்...

டிவி ல ஏதோ ஒரு ஷோல காட்டுனான்...பில் கேட்ஸ் வீடு 113 மில்லியன் அமெரிக்க டாலர் (நம்ம ஊர் கணக்குக்கு 500 கோடி) ஆனா நம்ம லக்ஷ்மி மிட்டல் அத எல்லாம் தூக்கி சாப்பிட்டுட்டார் 128 மில்லியன் அமெரிக்க டாலர்க்கு லண்டன்ல வீடு வாங்கி இருக்கார் (570 கோடி)...அதுக்கு எல்லாம் எத்தனை சைபர்னு கூட நமக்கு தெரியாது....

என்னோட வீடும் வித்தா நம்ம ஊர் பணத்துக்கு ஒரு 2 கோடி போகும்...வித்துட்டு வந்து செட்டில் ஆகிடாலாம்னு பாத்தா apartment owner கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவான் போல இருக்கு...

Ladies special coming soon.... :-)

Monday, December 11, 2006

கவித....கவித....

அடங்கப்பா training னா என்னமோ ஒரு நாலு நாளைக்கு ஓபி அடிக்கலாம்னு பார்த்தா கொன்னுட்டாய்ங்க...காலேஜ்ல படிக்கும் போதே ஒரு class க்கு மேல attend பண்ணது இல்ல (சாயந்தரம் ஒரு 5 glass உள்ள போகும் அது வேற விசயம்)...அதிலயும் first row ல ஒருத்தன் வழக்கம் போல கேள்வி கேட்டு தூங்கவிடாம உயிர எடுத்துட்டான்...எனக்கு அவன பார்த்து கேக்கனும்னு தோனிச்சு LKG ல இருந்து இப்படிதான ஆர்வ கோளாராராராராவே இருந்து இருப்ப..இன்னும் ஏண்டா அப்படியே திரியறீங்கனு...எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் முதல் நாள்ல இருந்து.. instructor ஒரு வெள்ளக்கார பிகரு அதுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயானு கடைசி வரைக்கும் தெரியாமயே போச்சு...

சரி எல்லோரும் கவித எழுதராங்க நானும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே ஞான சூனியமா இருக்கறது...அதுனால எனக்குள்ள இருக்கும் சிங்கம் சிடறிய பிலுப்பிக்கிட்டு ச்சே பிடறிய சிலுப்பிக்கிட்டு எந்திரிச்சதுல வந்த கவித இது....

கண்ணே நீ ஒரு sony vaio
பார்க்க சிக்னு எவ்வளவு
அழகா இருக்க

உங்க அப்பா ஒரு intel duo processor
வேலைக்கும் போய்கிட்டு என்ன
அடிக்கவும் ஆள் அனுப்பரார்

உங்க அம்மா ஒரு wireless router
பக்கத்து வீட்டு சம்மாச்சாரமெல்லாம்
எல்லார் வீட்டுகும் அனுபுறாங்க

உன் தம்பி ஒரு bluetooth mouse
என் தேவை அறிந்து கோட்டர்
வாங்கி வரான்

உன் தங்கை ஒரு keyboard
என்னேரமும் தட தடனு
பேசிட்டே இருக்காள்


இத எழுதி குடுத்ட உடனே அந்த பொண்ணு கிட்ட இருந்து பதில் வந்தது அது ஹைக்கூ வா இல்ல செருப்பானு நீங்களே சொல்லுங்க...

நீயே ஒரு கோட்டரு,

உன் தம்பி black&white மானிட்டரு,
உங்க அப்பா ஒரு 486 பிராஸசரு,
உங்க அம்மா ஒரு லவுட் ஸ்பீக்கரு,
உனக்கு எல்லாம் கேக்குதா சூப்பர் பிகரு...

இத படிச்சிட்டு எப்படியும் துப்ப போறீங்க அத நாலு தடவ துப்புனீங்கனா...comment ஆவது எனக்கு அதிகமா கிடைக்கும்.... :-)

Monday, December 04, 2006

Leave Letter

makkals, I am attending a training this week and will be off from blogsville for the next 4 days,catch up with you all after that...(porathuna po yaaru kettanganu thaana solreenga athuvum sari thaan).... :-)