TBI News - II
எங்க வீட்டுல நீ சாப்பிடு நான் சாப்பிடுனு ரெண்டு நாள் கிடந்து ஒரு Jr.TBI கிட்ட நீங்க எடுத்திட்டு போங்கனு குடுத்தாச்சு...ஆனா அவங்ககிட்ட இந்த மேட்டர் சொல்லாம அது இது எல்லாம் போட்டு பண்ணிருக்கு(யார் பண்ணதுனு எல்லாம் சொல்லல) ட்ரை பண்ணி பாருங்கனு குடுத்து விட்டாச்சு...அவங்களும் எடுத்திட்டு போய் சாப்பிட்டு பார்திட்டு நல்லா இல்லனு சொல்ல முடியாம...அது பாருங்க எங்க வீட்டுகாரருக்கு குழம்பு மட்டும் தான் பிடிக்கும் ஆனா வெறும் மீன் தான் இருந்ததுனு சொல்ல..இங்கயும் விடாம குழப்பு உங்களுக்கு புடிக்காதோனு அதிகமா மீன் மட்டும் போட்டு குடுத்தேன்னு சொல்ல...என்னமா நடிக்கறாங்கடா சாமி....
எங்க வீட்டு TBI ஒரு சட்னிக்கு ரெசிபி கேட்டாங்க..சொன்னேன் அப்புறம் அத பண்ணிட்டு என்ன சாப்பிட்டு பார்க்க சொன்னாங்க...ஏன்னா எதுக்கு ரிஸ்க்குனு தான்...நான் சாப்பிட்டு பார்துட்டு நல்லா இருக்குனு சொன்னேன்..பின்ன நான் சொன்ன ரெசிபி இல்லயா...அதுக்கு அவங்களா சொல்லிகிட்டாங்க...அவங்க அருமையா சமையல் பன்றாங்களாம்...ஆண்டவா
கிராஸ் டாக்...
TBI-1,என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...
TBI-2,என்ன பண்றது...இந்த செல்புல இருக்கற பாத்திரத்த எல்லாம் எடுத்து அந்த செல்புலயும் அதுல இருக்கறது எல்லாம் எடுத்து இதுலயும் வெச்சு பொழுத ஓட்டிட்டு இருக்கேன்...அடுத்த வாரம் மறுபடியும் இடம் மாத்தினா பொழுது ஓடிடும்...
TBI-1,கரெக்டா சொன்னீங்க நானும் அதுதான் பண்ணிட்டு இருக்கேன்
போன வாரம் ஒரு project management training இருந்தது...அதுல திடீர்னு NDA அப்படினா என்னனு கேட்டாங்க...எனக்கா தெரியாது Nayanthara Defence Acadamy அப்படினு...இருந்தாலும் சொல்லல.. ஆனா அந்த instructor சொன்னார் Non Disclosure Agreement னு லூசுப்பய
இதெல்லாம் படிச்சிட்டு வூட்டுல தங்கமனி ஒன்னும் கேக்கமாட்டாங்களா அப்படினு கேக்காதீங்க ஏன்னா அது எல்லாம் ரகசியம்...லேடிஸ்க்கு சொல்லபடாது...கல்யானம் ஆன ஆக போற பசங்க தெறிஞ்சுகனும்னா கமெண்ட்ல சொல்லுங்க...ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...