World Cup - 2007
இப்போ forward mail போஸ்ட்ல போடுறதுதான் பேமஸ்...அதுனால இப்பதான் வந்தது வேற யாரும் போடுறதுக்கு முன்னாடி நாமலும் போட்டுறலாம்னுதான்.....world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது....
" நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!!கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்..
இது forward mail ல வந்தாலும் அது ஒரிஜினலா ஆசிப் மீரான் பிளாக்ல இருந்து கிளம்பி இருக்கு...நன்றி ராம்..
April ல நம்ம வ.வ.சங்கம் முதல் வருட "ஆணி"வர்சரி கொண்டாடுராங்க...அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க...அது என்ன அட்லாஸ் வாலிபர்னு கேக்கறீங்களா...உலகத்த எப்படி அட்லாஸ் தாங்கறாரோ அது மாதிரி உலகம் பூரா இருந்து வர ஆப்புகள நம்ம தல கைப்பு சொல்லி குடுத்தமாதிரியே வாங்கறது தான்...நெக்ஸ்ட் வீக்ல இருந்து அங்க வந்து ஆணி,கும்மி எல்லாம் அடிச்சு ஆதரவு குடுங்க....